Android அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி ?

கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட் , ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது

Android அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி ?


ஆன்ட்ராய்ட்பற்றி அதிகம் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று  நினைக்குறேன்  சரி இதனை எப்படி நமது கணனியில் இயங்கு தளத்தில் இயக்குவது  என்று பாப்போம் இந்த மென்பொருள் பெரும்பாலும் விண்டோஸ் 7,8 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும்.

முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம்.

இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள "Search Icon" மீது கிளிக் செய்து தேடலாம். இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்.

 தரவிறக்க  சுட்டி

தொலைபேசியில் தரவிறக்க

கணனியில் இருந்து நீக்க

Services