அப்பிள் நிறுவனத்தின் சில அறிந்திராத தகவல்கள்

இப்போது உள்ள கணணிகளிலும் மொபைலிலும் அதிக நேர்த்தியான வடிவமைப்பும்  அதிக தரத்துடனும் இருப்பது  அப்பிள் தயாரிப்புகள் என்பது தான் உண்மை  இப்படி பட்ட இந்த நிறுவனத்தின் சில அறிந்திராத தகவல்கள் கிழே

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் எம்68 என பெயரிடப்பட்டிருந்தது. இந்த கருவியின் தயாரிப்பு பணிகளின் போது மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் தனித்தனியே உருவாக்கப்பட்டது. இதனால் இந்த கருவி வெளியாகும் வரை மென்பொருள் குறித்த தகவல்கள் ஹார்டுவேர் பிரிவினருக்கும், ஹார்டுவேர் குறித்த தகவல்கள் மென்பொருள் பிரிவினருக்கும் தெரியாமலே இருந்தது.

இன்று வரை சுமார் 600 மில்லியன் ஐபோன்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் லோகோவில் (முத்திரை) ஐசக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுவதை போன்று இருந்தது, அதிக குழப்பங்களை தவிர்க்க அந்த லோகோ மாற்றப்பட்டு விட்டது.

ஐபாட் தயாரிப்பு பணிகளில் இருந்த முதல் ஐபாட் கருவியை முதன் முதலில் ஸ்டீவ் ஜாப்ஸ் இடம் வழங்கப்பட்டது, அதனினை கையில் வாங்கிய ஸ்டீவ் உடனடியாக அதனினை நீரில் போட்டார், அந்த கருவியில் இருந்து குமுழியை கண்டு இதை இன்னும் சிறியதாக்க முடியும் என நிரூபித்திருந்தார்.

அமெரிக்க அரசாங்கத்தை விட ஆப்பிள் நிறுவனம் அதிக பணம் வைத்திருக்கின்றது. இன்றைய நிலவரப்படி உலகின் விலை உயர்ந்த நிறுவனமாக ஆப்பிள் விளங்குகின்றது

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரோனால்டு வெய்ன் ஆரம்ப காலத்தில் தனது 10 சதவீத பங்கினை ரூ.51,924க்கு ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் வோஸ்நியாகிடம் விற்பனை செய்தார். இன்று அந்த 10 சதவீதத்தின் மதிப்பு ரூ.22,70,39,57,50,000.


ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட அதிகம், மேலும் அமேசான் நிறுவனத்தின் 20 ஆண்டு லாபத்தை விடவும், ஃபேஸ்புக் நிறுவனத்தைவிட அதிகம். மேலும் ஆப்பிள் நிறுவனத்தால் ஃபேஸ்புக் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களையும் வாங்க முடியும்.

ஆப்பிள் ஐபேட் கருவிகளுக்கான ரெட்டினா தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் தயாரிக்கின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மென்பொருளுக்கு குரல் கொடுத்தவர் சூசன் பென்னட்.

உலகளவில் 115,000 ஊழியர்களை ஆப்பிள் ஸ்டோர்களில் நியமித்திருக்கும் ஆப்பிள் ஸ்டோர் உலகின் அதிக லாபம் ஈட்டும் ஸ்டோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது உள்ள கணணிகளிலும்  சரி மொபைலிலும் சரி அதிக நேர்த்தியான வடிவமைப்பும்  அதிக தரத்துடனும் இருப்பது  அப்பிள் தயாரிப்புகள் என்பது தான் உண்மை  இப்படி பட்ட இந்த நிறுவனத்தின் சில அறிந்திராத தகவல்கள் கிழே

Services